HCL
சிவ நாடார் தமிழக தொழிலதிபரும், கல்வியாளரும் ஆவார். ஹச்.சி.எல் கணினி குழுமத்தின் தலைவராகவும் நிர்வாக ஆளுனராகவும் இருக்கிறார்.
[தொகு] ஆரம்ப காலம்
தூத்துக்குடியில் மூலைபொழி என்னும் கிராமத்தில் மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தார். பின்பு பூ. சா. கோ (PSG) பொறியியல் கல்லூரியில் பொறியியல் பட்டப்படிப்பை முடித்தார். ஒரு சாதாரண கணினி நிறுவனத்தில் பணியாற்றிக்கொண்டிருந்த இவர் 1976ஆம் ஆண்டில் அஜய் சவுதிரி என்பவருடன் சேர்ந்து எச்.சி.எல் என்னும் நிறுவனத்தை தொடங்கினார். இன்று எச்.சி.எல் கணினி துறையில் மிகவும் பிரபலமான மென்பொருள் மற்றும் கணினி நிறுவனமாக விளங்குகிறது.
[தொகு] பெருமைகள்
1996ஆம் ஆண்டு இவர் எஸ்.எஸ்.என் என்னும் பொறியியல் கல்லூரியை சென்னையில் தொடங்கினார். 2000ஆம் ஆண்டு பொர்ப்ஸ் நிறுவனம் இவரை உலகின் முதல் 500 பணக்காரர்கள், மற்றும் முதல் 40 பணக்கார இந்தியர்கள் வரிசையில் சேர்த்தது. 2007ஆம் ஆண்டு கணக்கின்படி இவர் உலகத்தின் பணக்கார பட்டியலில் 217ஆம் இடத்தில் உள்ளார்.
No comments:
Post a Comment